குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முச்சக்கர வண்டி இறக்குமதியை வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி இறக்குமதியை வரையறுக்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சு பரிந்துரை செய்துள்ளது. இலங்கையின் வீதிகளில் பெரும் எண்ணிக்கையிலான முச்கக்கர வண்டிகள் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுமார் மூன்று மில்லியன் முச்சக்கர வண்டிகள் காணப்படுவதாகவும் இதனால் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 35 வயதுக்கும் குறைந்தவர்கள் முச்சக்கர வண்டி சாரதியாக செயற்படுவதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.