Home இலங்கைஇந்தியா , சீனா ஆகிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளைப் பேணுவது மிகவும் அவசியமானது

இந்தியா , சீனா ஆகிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளைப் பேணுவது மிகவும் அவசியமானது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளின் அடிப்படையில் நாட்டின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளைப் பேணுவது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இலங்கையர்களை விடவும் வாழ்க்கைத்தரம் உயர்வாகக் காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அவர் உலகின் அநேக நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பூகோள அமைவிடத்தை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More