குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி காவல்துறையினரால் நேற்றிரவு 13.730 (பதின் மூன்று கிலோ 730 கிராம்) கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தொண்டமான்நகர் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறைமா அதிபர் வெலிக்கன்னவின் விசேட மது ஒழிப்பு பிரிவினரின் விசேட தேடுதலிற்கமைய குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சந்தேகநபரையும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளையும் நீதிமன்றில் முற்படுத்தஉள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.