குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
இலங்கை நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சில நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் தங்களது அறிமுக நற்சான்று ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். மூன்று தூதுவர்களும் இரண்டு உயர்ஸ்தானிகர்களும் அறிமுக ஆவணங்களை இவ்வாறு ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த நிகழ்வு நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கனடா, ரஸ்யா, மாலைதீவு, பாகிஸ்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் இவ்வாறு ஆவணத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தனர். இந்த நாடுகளுனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.மிதவாத வெளியுறவுக் கொள்கைகளை பின்பற்றி இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.