குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாதகல் பகுதியில் வீடொன்றில் 9கிலோ 305கிராம் கஞ்சா போதை பொருளையும் இ 76 இலட்சத்து 2ஆயிரத்து 500ரூபாய் பணத்தினையும் பதுக்கி வைத்திருந்தார் எனும் குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் பிணையில் செல்வதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இளவாலை காவல்துறையினரினால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி இ குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கடந்த 11 மாதங்களாக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வருவதனால் குறித்த சந்தேக நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
அந்நிலையில் சந்தேகநபரின் உறவினர்கள் யாழ்.மேல் நீதிமன்றில் பிணை மனு தாக்கல் செய்தனர். அது தொடர்பிலான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது.
அதன் போது அரச சட்டவாதி இ சந்தேகநபரிடம் இருந்து மீட்கப்பட்ட 76 இலட்சத்து 2ஆயிரத்து 500ரூபாய் பணம் சான்று பொருளாக நீதிமன்றில் உள்ளமையால் இ பிணையில் செல்ல அனுமதிப்பதில் ஆட்சேபனை இல்லை மன்றில் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து குறித்த சந்தேகநபரை 25 ஆயிரம் ரூபாய் காசு பிணையிலும் இ 2 இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையிலும் செல்வதற்கு அனுமதித்ததுடன் இ மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இட வேண்டும் எனவும் நீதிபதி கட்டளையிட்டார்.
அதேவேளை சந்தேக நபரிடம் இருந்து மீட்கபட்ட 76 இலட்சத்து 2ஆயிரத்து 500ரூபாய் பணமும் உழைப்பால் சம்பாதித்து சேமித்த பணம் என உறவினர்கள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.