Home இலங்கைபளை இயக்கச்சியில் கஞ்சாவுடன் பெண் கைது

பளை இயக்கச்சியில் கஞ்சாவுடன் பெண் கைது

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறையினா்  தெரிவித்துள்ளனா்.

இன்று(23) மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட கஞ்சா பொதியுடன் திருகோணமலைக்கு செல்லவிருந்த நிலையில் இயக்கச்சி பகுதியில் வைத்து குறித்த பெண்  4.70  கிலோ கிராம்  கஞ்சாவுடன்  கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபரின் விசேட  பிரினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பெண் 32 வயதுடையவா் எனத் தெரிவித்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More