195
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரான்ஸின் தென்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பிரித்தானியாவினைச் சேர்ந்த பெண்மணியொருவர் பலியாகியுள்ளார். அவிக்னொன் என்ற பகுதியில் உள்ள ரொனே ஆற்றில் இடம்பெற்ற விபத்தில் 27 வயதான ஒரு குழந்தையின் தாயான ஜெசே வில்கெஸ் ( jess-wilkes ) என்பவரே பலியாகியுள்ளார்.
படகு எச்சரிக்கை ஓளிவிளக்கில் மோதியவேளை அவர் அதிலிருந்து தூக்கியெறியப்பட்டுள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவத்துள்ளனர்.மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். பலியானவர் பிரித்தானியாவின் கென்ற் பகுதியைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Spread the love