வெனிசூலாவில் அண்மையில் இடம்பெற்ற ஆளுநர்களுக்கான தேர்தல்களில் வெற்றிபெற்ற, எதிரணியைச் சேர்ந்தவர்களில் 4 பேர், அந்நாட்டின் சர்ச்சைக்குரிய அரசமைப்புச் சபைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். குறித்த அரசமைப்புச் சபையானது சட்டத்துக்குப் புறம்பானது என, குற்றம் சுமத்தி வந்த அவர்கள் தற்போது சபைக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
வெனிசுவேலாவின் முன்னைய சட்டத்தின்படி, மாநிலங்களின் ஆளுநராகத் தெரிவுசெய்யப்படுவோர், தமது பிராந்திய சபைக்கான ஆதரவை வெளிப்படுத்துவதே அவசியமானதாக காணப்பட்டது. எனினும் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, நாட்டின் அரசமைப்புச் சபைக்கான ஆதரவை வெளிப்படுத்துவதும் அவசியமாக காணப்பட்ட நிலையிலேயே தெரிவுசெய்யப்பட்டோரில் 4 பேர், தற்போது பதவியேற்றுள்ளனர். ஒருவர் மாத்திரம், இவ்வாறு அரசமைப்புக்குச் சபைக்கான ஆதரவை வெளிப்படுத்தி, பதவியேற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நீண்டகால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, இவ்வாறு தான் பதவியேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.