குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புதிய கடுமையான பாதுகாப்பு விசாரணைகளின் பின்னர் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதற்கு , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அனுமதி வழங்கியுள்ளார்.
11 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதில் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், ஒவ்வொரு விண்ணப்பம் என்ற அடிப்படையில் இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
11 நாடுகளுக்கான பிரஜைகளுக்கு புகலிடம் வழங்குவதில்லை என்ற ட்ராம்பின் கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களாக புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவது குறித்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.