குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொலை செய்ய அழைப்பு விடுக்கும் முன்னாள் உயர் இராணுவ அதிகாரி கமால் குணரட்ன எவ்வாறு யுத்தம் செய்திருப்பார் என்பது புரிகின்றதா என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அரசியல் சாசனத்தை நிறைவேற்றினால் அவ்வாறு நிறைவேற்றுவோரை கொலை செய்ய வேண்டுமென கமால் குணரட்ன அண்மையில் கூறியுள்ளார். கமால் குணரட்னவின் இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் எவ்வாறு யுத்தம் செய்திருப்பார் என்பது தெளிவாகின்றது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் படையதிகாரிகள் இவ்வாறு கருத்து வெளியிடுவதனால் சர்வதேச சமூகத்திடமிருந்து படைவீரர்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். நபர்களை கொலை செய்ய வேண்டும் எனவும், பாராளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் கூறுபவர்களின் உளவியல் பற்றி சற்றே சிந்தித்து பார்க்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடும்போக்குவாத அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முனைவது மேலும் கடும்போக்குவாதத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.