Home இலங்கைகட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

கட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

by admin


இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி   மைத்ரிபால சிறிசேனவுக்கும் கட்டார் பிரதமர் அப்துல்லாஹ் பின் நசர் கலீபா அல் தானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று  இடம்பெற்றது.  இலங்கை ஜனாதிபதியின் இந்த விஜயம், கட்டார் நாட்டுக்கு பெரும் கௌரவமாகும் எனக் குறிப்பிட்ட கட்டார் பிரதமர், இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த  இது பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டார்.

கட்டார் – இலங்கை இருதரப்பு உறவுகளை எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் பலமாக முன்னெடுப்பது குறித்து தலைவர்கள் விரிவாக கலந்துரையாடினர்.

இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்நுட்ப துறை ஒத்துழைப்புகளை மேலும் மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More