Home இலங்கை கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை நிராகரித்துள்ளது

கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை நிராகரித்துள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெய்னின் பிராந்திய அரசாங்கமான கட்டலோனியாவின் சுதந்திரப் பிரகடனத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஸ்பெய்ன் இராச்சியத்தின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை இலங்கை மதிப்பதாகத் தெரிவித்துள்ளது. கட்டலோனிய பாராளுமன்றில் சுதந்திரப் பிரகடனம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிக நெருங்கிய ஓர் நட்பு நாடாக ஸ்பெய்னை இலங்கைக் கருதுவதாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்னின் இறையாண்மைக்கு இலங்கை பூரண அளவில் ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளது. ஸ்பெய்னின் ஒர் பகுதியாகவே கடட்லோனியாவை இலங்கை கருதுகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More