குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய தலைவர்களுக்கு எதிராக ஸ்பெய்ன் வழக்குரைஞர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். ஸ்பெய்னின் அரச தரப்பு வழக்குரைஞர் ஜோஸ் மானுவல் மாஸா ( Jose Manuel Maza ) இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளார். பொதுப் பணத்தை துஸ்பிரயோகம் செய்தமை, கிளர்ச்சி செய்தமை, நாட்டை பிளவடையச் செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் கட்டலோனிய தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
கட்டலோனிய ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் (Carles Puigdemont ) உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கிளர்ச்சி குற்றச்சாட்டுக்கு உச்ச பட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பிரிவினைவாத குற்றச்சாட்டுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியனவற்றில் இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.