380
இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இலங்கையின் மேற்குக் கரைக்கும் இடையில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் ஜலசந்தி கடற்பகுதிகளில் அரிய வகை கடல் வாழ் உயிரினமான கடல் குதிரைகள் அரிகி வருவதாக கூறப்படுகிறது. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பவளப்பாறைகளிடையே காணப்படும் இந்தக் கடல்குதிரைகள் சூழல் மாசுபாட்டாலும், அதிக அளவில் வேட்டையாடப்படுவதாலுமேம் அரிதாகி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
இக் கடற்பரப்பில் பவளப் பாறைகளும் கடல்புற்களும் அதிகம் காணப்படுவதால் அரிதான கடல் வாழ் உயிரினங்கள் ஏராளமாக இங்கு காணப்படுகின்றன. உலகில் உள்ள 33 வகையான கடல் குதிரைகளில் ஐந்து வகையான கடல் குதிரைகள் இப் பகுதியில் காணப்படுகின்றன.ஹிப்போகாம்பஸ் என்ற உயிரியல் பெயர் கொண்ட குதிரை மீன் அதன் தலைப்பகுதியில் குதிரைத் தலை போன்ற தோற்றத்தால் கடல் குதிரை என்று அழைக்கப்படுகிறது. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் தோன்றி கடல் குதிரைகளின் ஆயுட்காலம் நான்கு ஆண்டுகள் மட்டுமே.
அலங்கார மீன்களாக வளர்க்கப்படும் கடல் குதிரைகள் வர்த்தக நடவடிக்கைகளின்போது ஆண்டுக்கு 25 மில்லியன் டொலர்களை ஈட்டித் தருவதாக கூறப்படுகின்றது. இதேவேளை மருத்துவப் பயன்பாட்டுக்கும் கடல் குதிரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்மா, தைரொய்கசன் போன்ற பிரச்சினைகளுக்கு கடல் குதிரையிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது.
இதனால் காரணமாக கடல் குதிரைகள் வேட்டையாடப்படுகின்றன. இந்திய மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் கடல்குதிரை பிடித்தலை தடை செய்துள்ளன.
உலக அளவில் மருத்துவ தேவைகளுக்காகவும் அலங்கார மீன்களாகவும் வளர்ப்பதற்காக கள்ளச் சந்தைகளில் இவை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தொடர்ந்து பயன்படுத்துவதாலும், கடலில் ஏற்படும் சூழலியல் மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பாலும் தற்போது கடல் குதிரைகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன என்று கடலியல் ஆய்வாளர் தாகிர் சைபுதீன் கூறியுள்ளார்.
இதேவேளை, கடல் குதிரைகளின் எண்ணிக்கை அரிதாக வருவதால் அவற்றை நடுக்கடலில் பண்ணைகள் அமைத்து பெருக்க முடியுமா என்று இராமநாதபுரம் மரைக்காயர்பட்டினத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஆய்வு செய்ய உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love