குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் சர்வதேச சமூகத்திடம் அரசாங்கம் தொடர்பில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளது. இதன்படிஇ எதிர்வரும் வாரங்களில் சர்வதேச அமைப்புக்களிடம் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து முறைப்பாடு செய்ய கூட்டு எதிர்க்கட்சித் தீர்மானித்துள்ளது.
அனைத்து பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் பொதுநலவாய நாடுகள் பாராளுமன்றம் ஆகியனவற்றில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல்கள் காலம் தாழ்த்தப்படுதல் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் மீதான அடக்குமுறைகள் தொடர்பில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைமையக்கத்திற்கு முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று இந்த வாரத்தில் சென்று ; செய்து முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு கூட்டு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள்இ பங்களாதேஸில் அமைந்துள்ள பொதுநலவாய நாடுகள் பாராளுமன்ற தலைமையகத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பிணை வழங்கப்படாது சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.