குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூயோர்க் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் ஆர்ஜன்டீன பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க்கில் வாகனம் ஒன்று பாதசாரிகள் மீது மோதச் செய்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் எட்டு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஐந்து பேர் ஆர்ஜன்டீன பிரஜைகள் எனவும் அவர்கள் ஐவரும் நண்பர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தமது 30 வருட மாணவ பருவ வாழ்வை நினைவுகூர்ந்து அதனை கொண்டாடுவதற்காக சுற்றுலா சென்றவர்கள் எனவும், இவர்களில் ஒருவர் ஆர்ஜன்ரீனாவின் பெரு வர்த்தகர் எனவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.