Home இலங்கைபுதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது – பொதுபல சேனா

புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது – பொதுபல சேனா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்படாது என பொதுபல சேனா இயக்கம் தெரிவித்துள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனமொன்றை உருவாக்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தக்கூட தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேவையற்ற வகையில் அரசியல் சாசனமொன்றை உருவாக்க அரசாங்கம் மெற்கொண்டு வரும் முயற்சி நாட்டில் பாரியளவு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அரசியல் சாசனம் பற்றிய பிரச்சினை கிடையாது அவர்களுக்கு வாழ்வது தொடர்பிலேயே பிரச்சினை உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் சாசனப் பிரச்சினையில் அரசாங்கத்தின் இயலாமை அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More