Home இலங்கைஏன் குடீவினிங் சொல்ல வில்லை என யாழில் காவல்துறையினர் மிரட்டல்:

ஏன் குடீவினிங் சொல்ல வில்லை என யாழில் காவல்துறையினர் மிரட்டல்:

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம்

சொன்ன இடத்தில நிப்பாட்டனும் இல்லைனா உங்கட ஆக்களுக்கு நடந்த கதி தான் உங்களுக்கும் என இரு இளைஞர்களை பருத்தித்துறை காவல்துறையினர் மிரட்டியதாக தெரிய வருகின்றது. பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வாகனத்தில் வந்து கொண்டிருந்த இரு இளைஞர்களையும் நேற்று புதன் கிழமை  பருத்தித்துறை காவல்துறையினர் மறித்து சோதனை நடாத்தியுள்ளனர்.

அதன் போது வாகனத்தை காவல்துறையினர் நிறுத்துமாறு சமிஞ்சை காட்டிய போது வாகன ஓட்டுனர் சற்று தள்ளி வாகனத்தை வீதியோரமாக நிறுத்தி விட்டு வந்துள்ளார்.  ஏன் உடனே நிற்பாட்டவில்லை? ஏன் குடீவினிங் சொல்லவில்லை? சொன்ன இடத்த நிப்பாட்டனும் இல்லைனா உங்கட ஆக்களுக்கு நடந்த கதி தெரியும் தானே என தமிழ் மொழி பேசும் காவல்துறை உத்தியோகஸ்தர் மிரட்டியுள்ளார்.

குறித்த காவல்துறையினரின் இலக்கம் 7812 என மிரட்டப்பட்ட இளைஞர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More