தெற்கு காஷ்மீரில் கடந்த 6 மாதங்களில் 80 தீவிரவாதிகளை ராணுவத்தினர் கொன்றுள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலினையடுத்து, தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு காஷ்மீரில் கடந்த ஆறு மாதங்களில் 80 தீவிரவாதிகளை ராணுவ வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என ராணுவ மேஜர் ஜெனரல் பி.எஸ்.ராஜூ தெரிவித்துள்ளார்.
காஷ்மீரின் தெற்கு பகுதியில் இன்னும் 115 தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர் எனவும் அவர்களில் உள்ளூர் தீவிரவாதிகள் 99 பேர் என்பதுடன் 15 பேர் வெளிநாட்டு தீவிரவாதிகள் எனவும் அவர்களை தேடும் பணியில் ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.