Home உலகம்தென் கொரியா – ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன:-

தென் கொரியா – ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன:-

by editortamil


சர்வதேச விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்ற நிலையில் தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து அமெரிக்க போர் விமானங்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

தென்கொரியாவையும் அதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்காவையும் தரைமட்டமாக்கி விடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

இதன் போது சக்திவாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தக் கூடிய அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் பறந்து பயிற்சியில் ஈடுபட்டன. இந்த பயிற்சியில் தென்கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் பங்கேற்றன என்று அமெரிக்க விமானப் படை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் ஆசிய நாடுகள் சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்க உள்ளநிலையில், கொரிய பகுதியில் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More