Home இலங்கைகட்டுநாயக்க, மினுவாங்கொடை பகுதியில் விபத்து 3பேர் உயிரிழப்பு:-

கட்டுநாயக்க, மினுவாங்கொடை பகுதியில் விபத்து 3பேர் உயிரிழப்பு:-

by editortamil

மினுவன்கொட 18ம் கட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக் வண்டியொன்று கட்டுப்பாட்டை இழந்து அருகாமையில் இருந்த ட்ரான்ஸ்போமரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த ஐந்து பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் மஹவ, நாவலபிட்டி மற்றும் மாத்தளை பிரதேசங்களை சேர்ந்த 26, 27 மற்றும் 54 வயதானவர்களே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்வர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More