குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மாலம்பே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் அரசினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்தே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 250 பெற்றோர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர். எனினும், இந்தப் போராட்டம் சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட இருப்பதனால் முதலில் 5 பெற்றோரே போராட்டத்தில் ஈடுபடுவர் என பெற்றோர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நிமால் கருணாசிறி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பெற்றோர் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம்
Nov 6, 2017 @ 03:20
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் போராட்டமொன்றை ஆரம்பிக்க உள்ளனர். இன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. சாகும் வரையில் பெற்றொர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 250 பெற்றோர் ஆவணமொன்றில் கையொப்பமிட்டுள்ளனர். எனினும், இந்தப் போராட்டம் சர்வதேச தர நிர்ணயங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட இருப்பதனால் முதலில் 5 பெற்றோரே போராட்டத்தில் ஈடுபடுவர் என பெற்றோர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நிமால் கருணாசிறி தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டம் எங்கு நடத்தப்படும் என்பது பற்றிய விபரங்கள் இன்று நண்பகல் 12.00 அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்