குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பூரண வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உச்ச அளவில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதற்கே அரசாங்கம் முனைப்பு காட்டி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த அரசாங்கம் ஊழல் மோசடிகள் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவே தாம், அரசாங்கத்தை விட்டு வெளியேறியதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் பேதம் பாராட்டாது இந்த அரசாங்கம் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் போது சில அரசாங்க அதிகாரிகள் தயக்கம் காட்டி வருவதாகவும் அவ்வாறு தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.