குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பெற்றொலை பகிர முடியாது அரசாங்கம் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் என கூட்டு எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நாட்டில் நாள் ஒன்றுக்கு 2500 மெற்றிக் தொன் எடையுடைய பெற்றோல் தேவைப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை உரிய முறையில் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்திலும் நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்கம், இந்தியன் ஒயில் நிறுவனத்திற்கு அஞ்சி செயற்பட்டு வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தரம் குறைந்த எரிபொருளை அரசாங்கம் விற்பனை செய்ய முயற்சிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.