குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினரின் நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சர் தலதா அதுகோரல அதிருப்தி வெளியிட்டுள்ளார். காவல்துறையினர் தங்களினால் தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளைக் கூட சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கவே முயற்சிக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் கிரமமான முறையில் தீர்க்கப்பட வேண்டுமென தவிர ஒரே இரவில் தீர்க்கப்பட முடியாதவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழக்கு விசாரணைகள் தாமதமடைவது குறித்து பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் சில மாதங்களில் நீதிமன்றத்துறையில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நீதியை நிலைநாட்டும் செயன்முறைக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.