Home இலங்கைவடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர்

வடமாகாண சபைக்கு புதிய உறுப்பினர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடமாகாணசபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில்   பதவி விலகியிருந்த நிலையில் இன்று அக்கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷெரீப் பதவியேற்றுள்ளார்

வடமாகாணசபையின் 109வது அமர்வு இன்று யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது

இதன்போது அகில இலங்கை மக்க்ள காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷெரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக்கடிதத்தினை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்து சபை அமர்வுகளில் கலந்துகொண்டு தனது முதலாவது உரையை ஆற்றினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More