Home இலங்கைகைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைப்பு

கைது செய்யப்பட்ட 4 இந்திய மீனவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.குறித்த பகுதியில் இன்று அதிகாலையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதன் போது மீனவர்கள் வசம் இருந்த படகு, வலைகள் மற்றும் மீன்கள் உள்ளிட்டவைகள் மீட்கப்பட்டு காங்கேசந்துறை துறைமுகத்துக்கு கடற்படையினரால் எடுத்து வரப்பட்டன.இவ்வாறு கைதானவர்கள் தமிழகத்தின் கோட்டை பட்டனத்தை சேர்ந்த மீனவர்கள் என்பதுடன்  தற்போது இவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More