Home உலகம்பிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும்

பிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து  பிரித்தானியா  வெளியேறிய பின்னரும் பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளில் அனேகமானவர்கள் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியும் என பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான திணைக்களமும் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சும் இன்று இதனை தெரிவித்துள்ளன. பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் அதற்காக வி;ண்ணப்பிப்பதற்காக இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்படும் எனவும் பிரித்தானியா  தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளின் உரிமைகளை பாதுகாக்கும் விடயத்திற்கு பேச்சுவார்த்தைகளில் நாங்கள் முன்னுரிமை அளித்து வருகின்றோம் என ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் டேவிட்டேவிஸ் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இங்கு தொடாந்தும் தங்கியிருக்க விரும்பும் அனைவருக்கும் புதிய நடைமுறைகள் ஊடாக ஆதரவு வழங்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More