குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் வரி குறைக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் இந்த வரி குறைப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் இந்த வரி குறைப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கு மற்றும் வெங்காயம் ஆகியனவற்றின் வரி கிலோ ஒன்றுக்கு 39 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ நெத்தலியின் வரி 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பருப்பின் வரி 12 ரூபாவினாலும், ஒரு கிலோ கருவாட்டின் வரி 50 ரூபாவினாலும், தேங்காய் மற்றும் மரக்கறி எண்ணெய் ஒரு கிலோவின் வரி 25 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிகள் குறைக்கப்படுவதனால் பொருட்களின் விலைகள் குறைவடையக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவிக்கப்படுகிறது.
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைக்க உள்ளது
Nov 8, 2017 @ 03:24
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக அரசாங்கம் பொருட்களின் விலைகளை குறைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லாட்சி அரசாங்கம் நாளைய தினம் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது. இந்த நிலையில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட முன்னதாக இன்றைய தினம் பொருட்களின்விலை குறைப்பு குறித்து அறிவிக்கப்பட உள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீர இன்று இந்த விலை மற்றும் மற்றும் மக்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் அறிவிக்க உள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைiமையில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் போது பொருட்களின் விலை குறைப்பு மற்றும் ஏனைய நிவாரணங்கள் தொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெளிவுபடுத்தியுள்ளார்.