Home இலங்கைவிசேட உயர் நீதிமன்றம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

விசேட உயர் நீதிமன்றம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனத்தின் 105(1)(ஆ) பிரிவின் அடிப்படையில் விசேட உயர் நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. பிரதம நீதியரசரினால் பெயரிடப்படும் மூன்று நீதிபதிகள் அடங்கிய மூன்று நீதிபதி குழாமின் ஊடாக வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமையவும், பிரதம நீதியரசரின் தீர்மானத்திற்கு அமையவும் வழக்கு விசாரணைகளை இந்த நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. ஊழல் மோசடிகள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்கும் நோக்கில் இந்த விசேட உயர் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட உள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More