Home உலகம்தென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவு இன்றி பாதிப்பு

தென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவு இன்றி பாதிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான தென் சூடான் புகலிடக் கோரிக்கையாளர்கள், உகண்டாவில் புகலிடம் பெற்றுக் கொண்டுள்ளனர். எனினும் பாரியளவில் தென் சூடானியர்கள் உகண்டாவில் புகலிடம் பெற்றுக் கொண்ட காரணத்தினால் கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடு காரணமாக சில தென் சூடானிய புகலிடக் கோரிக்iகாயளர்கள் மீளவும் சொந்த இடங்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டில் சராசரியாக மாதமொன்றுக்கு சுமார் 35000 புகலிடக் கோரிக்கையாளர்கள் தென் சூடானிலிருந்து, உகண்டாவிற்கு சென்றுள்ளனர்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கு போதியளவு நிதி வசதி கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More