அவற்றில் 9 பேரின் மனு 2003ஆம் ஆண்டு கால பகுதியில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக அநுராதபுரம் மேல் நீதிமன்றுக்கு 9 மனுக்களும் மாற்றப்பட்டுள்ளன. அந்த 9 பேரின் சார்பாக மீளவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நிராகரித்தது.
அவை தற்போது மற்றொரு மேல் நீதிமன்றில் நிலுவையில் உள்ளமையாலேயே நிராகரிக்கப்பட்டன என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டினார்.
மூவரின் மனுக்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம்.
ஏனைய 3 பேர் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்குகளின் விசாரனைக்காக நீதிபதி எதிர்வரும் 14ஆம் திகதி திகதியிட்டு உள்ளார்.
சட்டமா அதிபர் இராணுவ தளபதிகள் பிரதிவாதிகள்.
அந்த மனுக்களில் யாழ்ப்பாணம் இராணுவக் கட்டளைத் தளபதி, இராணுவத் தளபதி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.