குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்த நீதிமன்றின் முன்னிலையில் படையினர் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இராணுவப் படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவ நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ள அவர் நாட்டுக்காக படையினர் ஆற்றி வரும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை பாராட்டுக்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று படையினர் தொடர்ந்தும் நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு பங்களிப்பினை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தாம் ஜனாதிபதியாக இருக்கும் வரையில் எந்தவொரு படைவீரருக்கும் யுத்த நீதிமன்றங்களின் முன்னிலையில் முன்னிலையாக வேண்டிய அவசமிருக்காது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.