தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ள அதேசமயம் தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இந்த புதிய காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் மிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இன்று முதல் 13ஆம் திகதி வரை கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.