Home இலங்கைவடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் :

வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். வடக்கில் வாழ்;ந்து வரும் சில தமிழர்கள் இராணுவத்தினரால் துன்புறுத்தப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரிடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கடிதம் ஊடாக தாம் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்ததாகவும் துரதிஸ்டவசமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக அண்மையில் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More