இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவும் காற்று மாசு சூழலலால் இருதய நோய், சுவாச கோளாறு போன்றவை அதிகளவு ஏற்படும் என்று உலக பொருளாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.இது மனிதர் ஒருவருக்கு ஒரு நாளில் 45 சிகரெட்டுகளின் புகையை சுவாசிப்பதற்கு சமனான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. காற்றில் நச்சு வாயுக்கள் அதிகளவு இருப்பதால் அதனை சுவாசிக்கும் மக்கள் பல்வேறு பாதிப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லி அரசு அறிவித்துள்ள வாகன கட்டுப்பாடு திட்டத்துக்கு தேசிய பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி காற்று மாசுவினால் இருதய நோய், சுவாச கோளாறு அதிகளவு ஏற்படும் – உலக பொருளாதார அமைப்பு
152
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த எதிர்வரும் 13 முதல் 17ஆம் திகதி வரை இக்கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் என்றும் டெல்லி அரசு அறிவித்துள்ளது. இதேவேளை இந்த உத்தரவால் எந்த நன்மையும் இல்லை என்றும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு எனத் தெரிவித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.
அவசர வழக்காக இவ் வழக்கு எடுக்கப்பட்டு இத் திட்டத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற அவசர வாகனங்களை தவிர ஏனைய வாகனங்கள், வாகன கட்டுபாடு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Spread the love