குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுக்க உள்ளது. ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வது குறித்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளத் தயாரில்லை என ஐக்கிய தேசியக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது கட்சி ஆதரவளித்தது என தெரிவித்துள்ளது.
இந்த வாக்குறுதியை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்திருக்காது என சுட்டிக்காட்டியுள்ளது.