குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பவித்ரா வன்னியாரச்சி, சீ.பி. ரட்நாயக்க, திலும் அமுனுகம மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் கட் உறுப்புரிமை ரத்து செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒழுக்காற்று விசாரணைகளின் பின்னர் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தற்போது கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் உறுப்புரிமையை ரத்து செய்து அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமையையும் ரத்து செய்ய முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சிக்கு எதிராக செயற்படும் ஏனைய தரப்பினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கட்சித் தகவல்கள் தெரிவி;க்கின்றன.