ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் ராணுவ சோதனைச் சாவடிகளின் மீது தலிபான் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக 67 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளுர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களில் 22 காவல்துறையினரும் 45 தீவிரவாதிகளும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருடன் அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு படையினரும் செயற்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றிரவு கந்தஹார் மாகாணத்துக்குட்பட்ட 15 சோதனைச் சாவடிகளின்மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதாகவும் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் பல மணி நேரம் இந்த சண்டை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 35 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.