குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துப்பாக்கிதாரி ஒருவரிடமிருந்து பாடசாலை மாணவர்களை, ஆசிரியர்கள் காப்பாற்றியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் துப்பாக்கிதாரியொருவர் நான்கு பேரை படுகொலை செய்திருந்தார். இந்த துப்பாக்கிதாரி அருகாமையில் உள்ள பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த எத்தனித்துள்ளார்
எனினும், பாடசாலை ஆசிரியர்கள் சமயோசிதமாக துப்பாக்கிதாரி நுழையக்கூடிய கதவுகளை மூடி, விலைமதிப்பற்ற மாணவச் செல்வங்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளனர். பாடசாலை ஆசிரியர்களின் இந்த செயல் பலராலும் போற்றப்பட்டு வருகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரே ஒரு பாடசாலை சிறுமி கயாமடைந்துள்ளதாகவும் ஏனையோருக்கு கண்ணாடிகள் உடைந்ததனால் சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.