குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லெபனான் பிரதமர் சாட் ஹரீரி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்களில் உண்மையில்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-ஈவ்ஸ் லெ ட்ரியன் ( Jean-Yves Le Drian ) தற்போது சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்துள்ளார். சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தநிலையில் பிரதமர் ஹரீரியை சவூதி அரேபியா தடுத்து வைத்துள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும், ஹரீரி தனது சொந்த விருப்பின் அடிப்படையில் சவூதியில் தங்கியிருப்பதாகவும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் சவூதிக்கு பயணம் செய்திருந்த நிலையில், லெபனான் பிரதமர் ஹரீரி தனது பதவி விலகியிருந்தார்.
சவூதி அரேபியாவின் அழுத்தம் காரணமாக ஹரீரி பதவி வலிகயதாக செய்துள்ளதாக லெபனான் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.