குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 750 தடவைகள், பேசுபச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸூடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன் அலோசியஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2017ம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 750 தடவைகள் தொலைபேசி உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க 84 தடவைகள், அர்ஜூன் அலோசியஸூடன் பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.