சென்னை மண்டல சுங்கத்துறைக்கு சொந்தமான ‘இணையதளத்தை பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் முடக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னை மண்டல சுங்கத்துறையினரால் செயற்படுத்தப்ட்டு வரும் ‘www.chennaicustoms.gov.in’ என்னும் இணையதளமே இன்றைய தினம் இணையத்திருடர்களினால் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டீன் பாக் சைபர் ஸ்கல்ஸ்’ என்னும் பாகிஸ்தானை சேர்ந்த இணையத்திருடர்கள் இணையத்தினை முடக்கி அதில் சுதந்திர காஷ்மீருக்கு ஆதரவான வாக்கியங்களை பதிவு செய்ததுடன் இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் விமர்சனம் செய்திருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் சிறிது நேரத்துள் இணையம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டதாக சென்னை சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.