குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கம் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கம் நாட்டை காவல்துறை இராச்சியமொன்றை நோக்கி நகர்த்துவதாகத் தெரிவித்துள்ளார். அனைத்து தொலைபேசி உரையாடல்களும் ஒட்டு கேட்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகமும் அரசாங்கமும் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினதும் பிரதமரினதும் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவா என்பது சந்தேகம் என தெரிவித்துள்ள அவர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களே ஒட்டுக் கேட்கப்படுவதாக முன்னர் தாம் கருதியதாகவும் தற்போது, ஆளும் கட்சியினரின் தொலைபேசி உரையாடல்களும் ஒட்டுக் கேட்கப்படுவது அம்பலமாகியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.