கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றையதினம் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 441 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ள நிலையில் இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய எல்லையை அண்மித்த கச்சத்தீவுக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களை தாக்கியதோடு, மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தியதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர் எனவும் அவர்கள் மன்னார், காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் கைது:-
164
Spread the love