ஒன்றிணைந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா ஒத்துழைப்புகளை வழங்கும் என அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல், நல்லாட்சி மற்றும் சட்ட வழி செயற்படல், அனைவருக்கும் சமவுரிமை மற்றும் சமவாய்ப்புக்காக செயற்பட்டு வருகின்றதெனவும் இந்த தருணத்தில் அவர்களுக்கு தேவையான வகையில் தாங்கம் உதவுவோம் எனவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் அமெரிக்கா அரச உதவியுடன் ; நிர்மாணிக்கப்பட்ட மகளிர் பாடசாலையொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளம் தலைமுறையினரே இலங்கையின் எதிர்காலம் என்பதுடன், பாதுகாப்பான மற்றும் விருத்தியான சூழலில் வழங்கப்படும் தரமான கல்வியிலேயே எதிர்காலம் தங்கியுள்ளது. இந்தவகையில் மாணவர்கள் புதிய கருத்துக்களை ஆராயவும், பழைய எண்ணங்களை சவாலுக்கு உட்படுத்தவும் தேவையான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.