குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் தொடர்பில் கல்ப் (Gulf)நாடுகளிடம் கட்டார் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. மத்திய கிழக்கின் நான்கு நாடுகள் கட்டாருக்கு எதிராக சில தடைகளை விதித்துள்ள நிலையில் இவ்வாறு தடை விதித்த நான்கு நாடுகளினதும் பிரஜைகளை உலகக் கிண்ணப் போட்டித் தொடரை பார்வையிட அனுமதிக்க வேண்டுமென கட்டார் கோரியுள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு கட்டாரில் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது. வாழ்நாளில் மிக அரிதாக கிடைக்கப் பெறும் உலகக் கிண்ணப் போட்டிகளை கண்டு மகிழ்வதற்கான சந்தர்ப்பத்தை குறித்த நாடுகள் அந்த நாடுகளின் பிரஜைகளுக்கு வழங்க வேண்டுமென தெரிவித்துள்ளது.