குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கால்பந்தாட்ட அதிகாரிகள் மூன்று பேருக்கு சர்வதேச கால்பந்தாட்டப் பேரவை ஆயுட்காலத் தடை விதித்துள்ளது. குவாம், நிக்கரகுவா மற்றும் வெனிசுலா நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கே இவ்வாறு ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கால்பந்தாட்டத்துறையில் ஏற்பட்ட பாரியளவிலான ஊழல் மோசடிகள் காரணமாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குவாமின் முன்னாள் கால்பந்தாட்டப் பேரவை தலைவரும், சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் உறுப்பினருமான ரிச்சர்ட் லேய், நிக்கரகுவாவின் முன்னாள் கால்பந்தாட்டப் பேரவையின் தலைவரும், சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் அபிவிருத்தி அதிகாரியுமான ஜுலியோ ரொச்சா மற்றும் வெனிசுவலாவின் முன்னாள் கால்பந்தாட்டப் பேரவையின் தலைவர் ரபால் எஸ்குவில் ஆகியோர் இவ்வாறு ஆயுட்கால தடைக்கு உட்பட்டுள்ளனர்.