குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டென்மார்க் அரசாங்கம் சைபர் பாதுகாப்பினை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சைபர் தாக்குதல்களை முறியடிக்கக்கூடிய வகையில் அதி நவீன பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட உள்ளன. சைபர் பாதுகாப்பினை உயர்த்தும் நோக்கில் பாரியளவில் முதலீடு செய்யப்பட உள்ளதாக டென்மார்க்கின் பாதுகாப்பு அமைச்சர் கிளாஸ் ஹிஜோட் பிரெடெரிக்ஸன் (Claus Hjort Frederiksen ) தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட உள்ளது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
முன்கூட்டிய எச்சரிக்கை முறைமைகளின் ஊடாக சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.