Home இலங்கைஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் ?

ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் ?

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

யாழில்.இயங்கும் ஆவா குழுவில் முஸ்லீம் இளைஞர் ஒருவரும் உள்ளதாக சில இரகசிய தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாது, ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபர்கள் பலர் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது ஆவா குழுவின் பிரதான செயற்பாட்டாளராக 22 வயதுடைய இக்ரம் எனும் நபர் செயற்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் , அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை ஆவா குழுவிற்கு தகவல்களை வழங்கும் உளவாளியாக செயற்பட்டவர் எனும் சந்தேகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கஜபாலசிங்கம் நிதர்சன் எனும் இளைஞனிடம் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது ,ஆவா குழு பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் தமக்கு கிடைத்து உள்ளதாகவும் ,அவை தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More